ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

லோக் அதாலத் மூலம் 2,705 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு!

Image
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதி மன்றத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பாக நடைபெற்ற நேஷ்னல் லோக் அதாலத்தில் 2,705 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றதில் உள்ள சமரச நீதிமன்ற கட்டிடத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பாக நேஷ்னல் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல்,குடும்ப பிரச்னை, வாகன விபத்து, வங்கி வாரா கடன்கள் உள்ளிட்ட 5,900 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய வழக்குகள் லோக் அதாலத் மூலம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதில் 2,705 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு வழங்கபட்டது. மேலும் சமரச தீர்வு தொகையாக ரூ. 5,87,00,000 கோடிக்கும் மேல் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
credit ns7.tv