புதன், 5 பிப்ரவரி, 2020

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து செங்கோட்டையன் இதுவரை ட்விட்டரில் கூறியவை..!

Image
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வாரம் பின்லாந்து நாட்டிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
03-09-2019 
#Finland நாட்டில் பின்பற்றப்படும் கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்தும் கல்வியை மேம்படுத்தி வழங்க செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அங்குள்ள பள்ளிகளில் நேரில் சென்று பார்வையிட்டு அந்நாட்டு கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். 
நாட்டில் பின்பற்றப்படும் கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்தும் கல்வியை மேம்படுத்தி வழங்க செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அங்குள்ள பள்ளிகளில் நேரில் சென்று பார்வையிட்டு அந்நாட்டு கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.  
13-09-2019 
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியீடு.
17-09-2019
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை.
இந்த பொதுத்தேர்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
18-09-2019
தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட குழந்தை "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின்கீழ் உடனடியாக அதேபள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
23-09-2019
7500 பள்ளிகளில் 8, 9, 10 ஆம் வகுப்புகளுக்கான "ஸ்மார்ட் கிளாஸ்" அமைக்கின்ற பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும்.
8-11-2019
5, 8 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.
27-12-2019
நர்ஸரி, மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைப்பது மன அழுத்தத்தை தரும் என்பதால்,
"விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது" என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
21-01-2020
5 மாணவர்களாக இருந்தாலும், 2 மாணவர்களாக இருந்தாலும் பொதுத் தேர்வுகள் அதே பள்ளியில் தான் நடைபெறும், வேறு பள்ளிக்கு அழைத்து செல்லக் கூடாது என பள்ளி இயக்குநர், இணை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மாதிரி வினாத்தாள் 120 மாவட்ட பள்ளி கல்வி மையங்களில் தயார் செய்யப்படும்.
31-01-2020
இந்த ஆண்டு கூடுதலாக 52 இடங்களில் பொதுத்தேர்வு மையங்கள்!
04-02-2019
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13-09-2019 அன்று வெளியிடப்பட்ட அரசாணை ரத்து.
credit ns7.tv