திங்கள், 10 பிப்ரவரி, 2020

பூமி வெப்பமயமாதலை தடுக்க விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி...!

Image
பூமி வெப்பமயமாதலை தடுக்க தேனி மாவட்டத்தில் 20 ஆயிரம் விதைப்பந்துகளை தூவும் நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியிலிருந்து கம்பம் மெட்டு அடிவாரம் வரை விதைப்பந்துகளை தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. புவிவெப்பமாதலை தடுத்து பசுமையை மீட்டெடுக்க நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் மாணவர்கள் பங்கேற்றனர். உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு இந்நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சாலையில் சென்ற ஸ்கேட்டிங் மாணவர்கள், 20 ஆயிரம் விதைப் பந்துகளை சாலையின் இருபுறமும் தூவியவாறு சென்றனர்.
credit ns7.tv

Related Posts: