புதன், 5 பிப்ரவரி, 2020

சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்!

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் சாலையில் வீணாவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சியிடம் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.  
Photo
சாலையில் வீணாகும் தண்ணீரில், ஒருவர் சோப்புப் போட்டு குளித்ததை  அந்த வழியே சென்றவர்கள்  ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
credit ns7.tv

Related Posts: