ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

CAAவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Image
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவு செய்து வைத்தார். சென்னை ஓட்டேரி பகுதி மக்களிடம் வீடுவீடாகச் சென்று கையெழுத்துகளைப் பெற்ற பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததால் தான், இந்தியாவே வீதியில் இறங்கி போராடுவதாக விமர்சித்தார்.
வேலை வாய்ப்பின்மை, விவசாய பிரச்சனை, பொருளாதார சரிவு போன்றவற்றில் இருந்து மக்காளை திசை திருப்பவே மத்திய அரசு இவ்வாறு நாடகமாடுவதாகவும் அவர் சாடினார். சட்டத்துக்கு எதிராக 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கையெழுத்துப் பிரதிகள் ஓரிரு நாளில் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
credit ns7.tv