டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று(08-02-2020) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்ற நிலையில் மாலை இறுதி நிலவரப்படி 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 54க்கும் அதிகமான வாக்கு சதவீதத்துடன், 67 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது ஆம் ஆத்மி கட்சி. 32 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றிருந்த போதும் பாஜக வால் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
அதேபோல, தற்போதைய தேர்தலிலும், தேர்தலுக்குப் பின்னான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், இரண்டாவது இடத்தை பாஜக பிடிக்கும் என்றும், காங்கிரஸுக்கு கடந்த ஆண்டைப்போலவே வெற்றி ஏதும் கிடைக்காது என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்:
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு முடிவு:
ஆம் ஆத்மி கட்சி - 44 இடங்களிலும்,
பாஜக - 26 இடங்களிலும்,
காங்கிரஸ் - 0 இடங்களிலும் வெற்றிபெறும் என டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
NEWSX கருத்து கணிப்பு முடிவு:
ஆம் ஆத்மி கட்சி 50-56 இடங்களிலும்,
பாஜக 10 - 14 இடங்களிலும்,
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என நியூஸ்எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளது
நியூஸ் நேசன் கருத்து கணிப்பு முடிவு:
ஆம் ஆத்மி கட்சி - 55 இடங்களிலும்,
பாஜக - 14 இடங்களிலும்,
காங்கிரஸ் - 1 இடத்திலும், வெற்றிபெறும் என நியூஸ் நேசன் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிபப்ளிக் கருத்து கணிப்பு முடிவு:
ஆம் ஆத்மி கட்சி 48-61
பாஜக - 9-21
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பு முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv