செவ்வாய், 9 ஜூன், 2020

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க சார்பில் புதிய மனு!

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சபாநாயகர் எந்தவிதமான பணியும் இதுதொடர்பாக எடுக்காமல் உள்ளதை சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருந்தும் சபாநாயகரால் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ள 7 எம்எல்ஏக்களை சட்டமன்ற அலுவல்களில் கலந்து கொள்ள மணிப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், தி.மு.க தனது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளது.

சபாநாயகர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது