செவ்வாய், 9 ஜூன், 2020

சென்னையில் படுக்கை வசதிகள் இல்லை எனக் கூறுவது, முற்றிலும் தவறான தகவல் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் படுக்கை வசதிகள் இல்லை எனக் கூறுவது, முற்றிலும் தவறான தகவல், என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து, அரசால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் குழு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளில் மட்டும், 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில், 17 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எனவே, அரசு மீது விமர்சனம் செய்வததை தவிர்க்க வேண்டும், எனவும் அவர் குறிப்பிட்டார்.