தனிப்பட்ட பயணமான கேரளா வந்திருந்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசியுள்ளார்.
குறைந்த செலவில் ராக்கெட் தயாரித்து விண்ணுக்கு அனுப்புவதில் முதல் நிலையில் உள்ள இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று இஸ்ரோ யோசனை தெரிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தனிப்பட்ட பயணமாக கேரளா வந்திருந்த இஸ்ரோ தலைவர் சிவன் – ஐ தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி சர்க்யூட் அவுஸில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இஸ்ரோ மூலம் தென் தமிழகத்தில் வேலை வாய்ப்பை பெருமளவில் உருவாக்க வேண்டுகொள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.,
மேலும் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்தை துரிதகதியில் செயல்படுத்தவும், ராக்கெட் உதிரி பாக தொழிற்சாலைகளை விரைந்து அமைக்கவும் தமிழக முதல்வரின் சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-mano-thangaraj-meet-isro-head-shivan-in-kanniyakumari-365644/