Tamilnadu Rain Update : வலிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீர் நிலைகள், அனைகள் பல நிரம்பியள்ளதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் மழையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தலைநகரான சென்னை வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், பல பகுதகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை கடந்த சில தினங்களாக ஆய்வு செய்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் தற்போது சென்னை திரும்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க்பபட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பக்கு இடையே மழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், வங்கக்கடலில் யைம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு யைம், இந்த காற்றழுது்த தாழ்வு மண்டலம் நாளை காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு தற்போது காற்றழுது்த தாழ்வு மண்டலம் சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் – ஸ்ரீஹரிகோட்டா வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்த வானிலை ஆய்வு மையம் தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 11 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rain-update-depression-will-cross-the-coast-changed-367546/