திங்கள், 8 நவம்பர், 2021

சென்னை ஏரிகளில் கனமழையால் உயர்ந்து வரும் நீர்மட்டம்; முழு நிலவரம்

 நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள நீர்தேக்கங்களின் கொள்ளளவு உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னையை சுற்றியுள்ள நீர்தேக்கங்களின் நிலவரம் இதோ…

பூண்டி நீர்தேக்கம்

3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்தேக்கம் இன்றைய நிலவரப்படி 2864  மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.

சோழவரம் நீர்தேக்கம்

சோழவரம் நீர்தேக்கமும் கிட்டதட்ட அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 915 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.

புழல் ஏரி (செங்குன்றம்)

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவில், 2872 மில்லியன் கன அடி அளவு நீர் நிரம்பியுள்ளது.

வீராணம் ஏரி

வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 1456 மில்லியன் கன அடியில் 926 மில்லியன் கன அடி அளவு நீர் நிரம்பியுள்ளது.

தேர்வாய் கண்டிகை

தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவு 500 மில்லியன்கன அடியாக இருக்கும் நிலையில், ஏரியில் காலை நிலவரப்படி 491 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் அதிக கொள்ளளவைக் கொண்டுள்ள மிகப்பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் 2934 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.

இந்த நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர் வட்டம் – செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருலிந்து உபரி நீர் வெளியேற்றுதல் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.

முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வரிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-reservoirs-status-in-tamil-365846/

Related Posts: