புதன், 1 டிசம்பர், 2021

இலங்கை தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சி: தமிழ் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்; 3 ராணுவ வீரர்கள் கைது

 30 11 2021 Sri lankan Soldiers brutally attacks on tamil journalist, tamil journalist attacked while covering commemoration of SL tamils, இலங்கை தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல், 3 ராணுவ வீரர்கள் கைது, Sri Lanka, Sri Lanka military, Sri lanka soldiers, tamil journalist

இலங்கைப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் மீது இலங்கைப் படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் வடக்கில் உள்ள முல்லைத்தீவு விடுதலைப் புலிகளின் மையப்பகுதியாக இருந்தபோது, ​​வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு இணையான அரசாங்கத்தை நடத்தினர்.

2009ம் ஆண்டு இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகள் உடன் நடத்திய இறுதிப் போரில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இந்த வாரம் நடைபெற்றது. நினைவேந்தல் நிகச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலங்கை படையினர் கொடூரமான முறையில் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை ஊடகத்துறை அமைச்சர் டல்லஸ் அலஹபெருமாவுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் கடந்த நவம்பர் 28ம் தேதி செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது முல்லைத்தீவில் வைத்து கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகவியலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது முள்கம்பியால் சுற்றப்பட்ட பனைமட்டையால் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த இலங்கை இராணுவத்தின் குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகளைக் குறிப்பிட்டு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு போலீசார் மூன்று ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் உள்ள முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப் புலிகளின் மையப்பகுதியாக இருந்தபோது, ​​விடுதலைப் புலிகள் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இலங்கை அருக்கு இணையான அரசை நடத்தினர்.

2009ல் இலங்கை இராணுவத்தினரால் அழிக்கப்படுவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரக் கொண்டாட்டங்களுடன் யுத்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் இறந்தவர்களை நினைவுகூருவதை இலங்கை பாதுகாப்பு நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பயங்கரவாதிகளை நினைவுகூரும் முயற்சிகளை தடுக்க உள்ளூர் காவல்துறை நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுகிறது.

மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருடாந்திர மாவீரர் தின உரையில், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26 ம் தேதி தனது பிறந்த நாளான நவம்பர் 26, 1982 இல் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முதலாவது போராளியின் நினைவு தினமாகவும் கடைபிடித்து வந்தார்.

முன்னாள் வடக்கு மற்றும் கிழக்கு மோதல் பகுதிகளில் இருந்த ஊடகவியலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதன் தொடர்ச்சியே இந்த சம்பவம் என ஊடகவியலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது.

இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின்படி, வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கைத் தமிழர்களுடனான 30 ஆண்டு கால கொடூரமான போர் உட்பட பல்வேறு மோதல்கள் காரணமாக குறைந்தது 100,000 உயிர்களைக் இறந்துள்ளனர். 20,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

2009-ல் பிரபாகரனை இலங்கை ராணுவத்தினர் கொன்றதன் மூலம் முடிவடைந்த இறுதிக்கட்டப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டினர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழர்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை எனக் கூறி, இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

source https://tamil.indianexpress.com/international/sri-lankan-soldiers-brutally-attacks-on-tamil-journalist-while-covering-commemoration-of-sl-tamils-376757/