வெள்ளி, 3 டிசம்பர், 2021

டிச.7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் –

 அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவர் மற்றும் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று, கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும். இதற்கு டிசம்பர் 3 முதல் 4 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5-ஆம் தேதி பகல் 11.25 மணிமுதல் நடைபெறும்.

டிசம்பர் 7-ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்தல்நடைபெறும். டிசம்பர் 8 இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உள்கட்சி தேர்தல் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொன்னையன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/ops-and-eps-announced-elections-for-coordinator-and-joint-coordinator-posts-377605/