தமிழகத்திற்கு டிசம்பர் மாதம், 94,650 டன் யூரியா, 24,100 மெட்ரிக் டன் டிஏபி, 9,500 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெட்ரிக் டன் காம்ப்லக்ஸ் உரங்கள் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் உரத்தட்டுப்பாட்டை கருதில் கொண்டு தமிழகத்திற்கு கூடுதலாக உற ஒதுக்கீடு செயய வேண்டும் என்று தமிழக வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி தற்போது தமிழகத்திற்கு 10.800 மெட்ரிக்டன் யுரியா உரங்கள் மங்களூர் துறைமுகத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
மேலும் கடந்த டிசம்பர் 8-ந் தேதி தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 36,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உரங்களை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உர நிறுவனங்களுக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உரத் தட்டுப்பாடு காரணமாக, காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலிறுத்தி மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு, தமிழக வேளான்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடிதம் எழுதியதை தொடர்ந்து தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 20,000 மெட்ரிக்டன் பொட்டாஷ் உரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள உரத்தினை தேவை அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்த உரங்களில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பொட்டாஷ் உரத்தின் விலை ரூ1700-ஆக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ரூ1040-ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ660 அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த விலை ஏற்றம் புதிதாக வந்துள்ள உரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே இருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இருப்பில் உள்ள உரங்ள் பழைய விலைக்கே விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு கன்காணிப்பு குழு அமைக்கப்பட்டள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-central-allots-additional-urea-for-tamilnadu-383374/