New Zealand’s lifetime ban on cigarette sales : இளைஞர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதை தடை செய்து வியாழன்று அறிவித்துள்ளது நியூசிலாந்து. புகைப்பழக்கத்தினால் நிகழும் மரணங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள கடுமையான முடிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
நியூசிலாந்தின் பூர்வகுடியான மௌரி மக்கள் தொகையின் விகிதாசாரம் குறையாமல் இருக்கும் பொருட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண சிகரெட் பேக்கேஜிங் கட்டாயமாக உள்ள 17 நாடுகளில் நியூசிலாந்து ஏற்கனவே ஒன்றாகும்.
18 வயதிற்கு குறைவானவர்களுக்கு சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் நாட்டின் சராசரி புகைப்பிடிக்கும் மக்களின் எண்ணிக்கையை 5% கீழே கொண்டு வர இது போதுமானதாக இல்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
வாழ்நாள் தடை
14 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடையோருக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்வது 2027ம் ஆண்டில் இருந்து சட்டப்படி குற்றமாகும். இந்த தடை அவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதாவது அவர் 2073ம் ஆண்டு 60 வயது அடையும் வரை இந்த தடை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேலே உள்ளவர்கள் புகைப்பிடிக்க தடை ஏதும் இல்லை.
ஏன் 14 வயது?
நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து குறிப்பிடும் போது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் சிறிய வயதிலேயே இளைஞர்கள் விழுந்துவிடுகின்றனர். 18 வயது ஆகும் போது அவர்கள் புகைப்பிடிக்க துவங்கி விடுகின்றனர். 25 வயதிற்குள் 95% பேர் புகைப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். ஒரு தலைமுறையையே புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து காப்பது ஆண்டுக்கு 5 ஆயிரம் புகைப்பிடித்தல் தொடர்பான மரணங்களை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.
வேறேன்ன மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன?
முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு இறுதிக்குள் சட்டம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, முதலில் 2024 முதல் சிகரெட்டுகளை விற்கக்கூடிய கடைகளின் எண்ணிக்கையை அது கட்டுப்படுத்தும். பின்னர் அது மிகவும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கும் நிகோடின் அளவைக் குறைக்கும். இதனால் 2025ம் ஆண்டில் இருந்து புகைப்பிடிப்பதை நிறுத்துவது எளிதாக்கப்பட்டுவிடும். இதன்மூலம் 2027ம் ஆண்டு முதல் புகைப்பிடிக்காத தலைமுறை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
New Zealand’s lifetime ban on cigarette : விதிகள் எவ்வாறு அமல்படுத்தப்படும்?
தடையை எப்படி கண்காணிப்பார்கள் என்பது குறித்த தகவல்கள் எதையும் நியூசிலாந்து அதிகாரிகள் தற்போது வரை கூறவில்லை. அதே போன்று எந்த சில்லறை விற்பனையாளர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து தடுக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்படும் போது விரிவான தகவல்கள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து உலகின் மிகவும் கடினமான புகையிலை எதிர்ப்பு அதிகார வரம்பாக அமையுமா?
முற்றிலுமாக இல்லை. பூடான் நாடு 2010ம் ஆண்டு சிகரெட் விற்பனையை முற்றிலுமாக தடை செய்தது. ஆனால் 2020ம் ஆண்டு கறுப்பு சந்தைகள் மூலம் இந்தியா வழியாக சிகரெட்டுகள் கொண்டு வருவதை தடுக்க 2020ம் ஆண்டு தற்காலிகமாக அந்த தடை நீக்கப்பட்டது என்று அல் – ஜஸீரா செய்தி வெளியிட்டிருந்தது.
அடுத்தது என்ன?
புகையிலை கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு மாவோரி பணிக்குழு, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நியூசிலாந்து அரசாங்கம் சட்டத்தை உருவாக்க விரும்பும் திட்டத்தைப் பற்றி ஆலோசனை செய்யும். சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பொருளாதார அதிர்ச்சியைக் குறைக்க கட்டங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்த விரும்புவதாக அரசாங்கம் கூறுகிறது. அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ள மக்களிடம், குறிப்பாக மனநல பிரச்சனைகளை கொண்டுள்ள மக்களுக்கு இந்த மாற்றத்தை நிர்வகிக்க நேரம் கொடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/how-will-new-zealands-lifetime-ban-on-cigarette-sales-work-381201/