செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

சுன்னத் ஜமாஅத் இமாம் மீது தாக்குதல் : களம் இறங்கியது TNTJ....!!


முகநூல் முஸ்லிம் மீடியா's photo.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கும் முன்பு ஒயின்ஷாப் அமைக்கப்பட்டதன் காரணமாக இரண்டு நாட்களுக்கும் முன்பு பள்ளிவாசல் இமாம் குடிகாரர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக விரைந்து களம் இறங்கிய TNTJ கொடுத்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மதுபான கடையை அகற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து ஒருதலைபட்சமாக நடந்து வரும் ஜெகதாப்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளரை கண்டித்தும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த TNTJ நிர்வாகிகள்...
மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Posts: