வியாழன், 18 ஆகஸ்ட், 2016

முழுமையான விபரங்களை அவர்கள் கொடுத்த பிறகே கணக்கெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்!

வீடு வீடாக கணக்கெடுப்பு எடுக்க வந்தவர்களிடம்! முழுமையான விபரங்களை அவர்கள் கொடுத்த பிறகே கணக்கெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்!
*********************************************
திருநெல்வேலி மாவட்டம்!
ஏர்வாடியில்!
17.08.2016 அன்று! ஏர்வாடி ஷாஜஹான் தெருவில் மூன்று பேர் கொண்ட ஒரு குழு வீடுகளில் கணக்கெடுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்கள்!
உடனடியாக அவர்களை தமுமுக ஏர்வாடி பேரூர் கிளை அலுவலகத்திற்கு வரவழைத்து கணக்கெடுப்பவர்கள் மற்றும் கணக்கெடுக்கும் விபரங்களை கேட்டரிந்து!
அவர்கள் கொடுத்த தகவலின்படி சிதம்பரம் அண்ணாமலை யுனிவர் சிட்டியின் பேராசிரியர் ரவிசங்கர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது!
எங்கள் கல்லூரி மாணவிகள் Phd பன்னுவதற்காக மூன்று தலைப்புகளில் தகவல்கள் எடுக்க சொள்ளியுள்ளதாக கூறினார்!
இது சம்மந்தமாக! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை கூறினோம்! பேராசிரியர் அவர்கள் மேற்கண்ட தகவல்களை கேட்டரிந்து கணக்கெடுப்பதற்கு அனுமதிக்கலாம் என்று கூறினார்கள்!
1-ஒவ்வொரு மதத்தவர்களும் பின்பற்றும் கடவுள் கொள்கை! (இந்து,முஸ்லிம்,கிருஸ்டின்)
2-மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பின்பற்ற வேண்டிய வழி முறைகள்!
3-மாணவ மாணவிகள் முன்னேற எந்த வகையான கல்விகளை கொண்டு வரலாம்!
என்ற மேற்கண்ட மூன்று தலைப்புகளில் 40 வீடுகளில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த அனுமதி கேட்டார்கள் அனுமதி வழங்கப்பட்டது!
வருகை தந்த சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை தெரிந்து கொள்வதற்காக தமுமுக ஏர்வாடி பேரூர் கிளை சார்பாக 3 நபர்களுக்கும் தமிழ் மொழிப்பெயர்ப்பில் குர்ஆன் வழங்கப்பட்டது!
இந்த நிகழ்வின் போது!
*தமுமுக ஏர்வாடி பேரூர் செயலாளர் அப்துல் காதர்! *துணை செயலாளர் அன்வர் சதாத்! *13-வது வார்டு மமக செயலாளர் அமீர் அலி! *15-வது வார்டு மமக செயலாளர் ஷரீப்!
*தமுமுக நெல்லை கிழக்கு மாவட்ட முன்னால் பொருளாளர் பக்ருதீன் அலி அஹ்மத் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமுமுக ஏர்வாடி பேரூர்.