புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நிலைதடுமாறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
டெல்லியில் பொறியாளராக பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசர் என்பவர், தனது மனைவி, மகன், மற்றும் சகோதரி குடும்பத்தாருடன், நெல்லை அருகே உள்ள வள்ளியூருக்குச் சென்றுள்ளார்.
அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு சென்னை வழியாக டெல்லி செல்ல திட்டமிட்ட அவர், குடும்பத்தாருடன் வள்ளியூரிலிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். புதுக்கோட்டை விராலிமலை அடுத்த வராலூர் அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையோரம் இருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் திருநாவுக்கரசரின் மகன் சித்தார்த், சகோதரி மணிமேகலை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி ராஜேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து விராலிமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.