தமிழகத்தில், 19 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை முன்னாள் மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜ், தீயணைப்புத் துறை டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்புத் துறை ஏ.டி.ஜி.பியாக இருந்த குடவ்லா, தமிழ்நாடு காவல்துறை பயிற்சியக ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை பயிற்சியக டி.ஜி.பியாக இருந்த கே.பி.மகேந்திரன், மின்வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐ.ஜி சாரங்கன் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி,யாகவும், செந்தாமரைக் கண்ணன் தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகர உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த தாமரைக்கண்ணன், சி.பி.சி.ஐ.டி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல், பிரேம் ஆனந்த் சின்ஹா சென்னை பெருநகர வடக்கு போக்குவரத்து இணை ஆணையராகவும், ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அருண் சக்திகுமார் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபி சக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாகவும், அருளரசு நாமக்கல் மாவட்ட எஸ்.பியாகவும், ஓம் பிரகாஷ் மீனா ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.