புதன், 3 மே, 2017

தென்மாவட்டங்களில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் May 02, 2017

தென்மாவட்டங்களில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, தூத்துக்குடியில் சமையல் சிலிண்டர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தென்மாவட்டங்களில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான சமையல் சிலிண்டர் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எரிவாயு நிரப்பும் மையத்தில், லாரிகளை நிறுத்த இட வசதி இல்லாததை கண்டித்தும், குடிநீர், கழிப்பிட வசதி செய்து தரக்கோரியும் 
லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, போராட்டம் தொடரும் என லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.