திங்கள், 8 மே, 2017

தனியார் மருத்துவமனைகளால் வறுமைக்கு தள்ளப்பட்ட இந்தியர்கள்! May 08, 2017




2004 முதல் 2014 வரை தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெறுவதற்காகச் செலவு செய்ததில் 5.6 கோடி இந்தியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2004-2014 - தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெறுவதற்காக செலவு செய்ததால் 5.6 கோடி இந்தியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

உலகளவில் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியா 6வது இடம் பிடித்துள்ளது. 

தனியார் மருத்துவமனையை பயன்படுத்தும் இந்தியர்களின் சதவிகிதம் 65.6ஆக உள்ள நிலையில், உலகளவில் தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெறும் 28.15 சதவிகிதம். 

பொது சுகாதாரத்துக்கு செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 147வது இடத்தில் உள்ளது. உலக வங்கியின் கணிப்புப்படி, 2040இல் பொதுசுகாதாரத்துக்கு செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்று இடங்கள் மட்டுமே முன்னேறி இந்தியா 143வது இடத்தைப் பிடிக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் பொது சுகாதாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும்  என உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.16 சதவிகிதம் மட்டுமே பொது சுகாதாரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவை விட பொது சுகாதாரத்துக்கு அதிக செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.