இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணநாயகேவின் பெயரில் இருந்த போலி ட்விட்டர் கணக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ரவி கருணநாயகே நேற்றுதான் பதவியேற்றார். இந்நிலையில், அவரது பெயரில் இருந்த போலி ட்விட்டர் கணக்கில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதாக பதிவிடப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் உடனடியாக, சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அந்த போலி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதனிடையே, தனது பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்பதையும், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ரவி கருணநாயகே பதிவு செய்துள்ளார்.