
திருவாரூர் அருகே பேருந்துகள் இயக்கப்படாததால், அரசுப் பள்ளி சுமார் 500 பேர் மாணவர்கள் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, திருவாரூரில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதனால், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அரசு விழாவுக்காக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள செவலக்காரன் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், பள்ளி முடிந்து தங்கள் வீடுகளுக்கு செல்ல, பேருந்து நிலையத்தில் பலமணி நேரம் காத்திருந்தும் எந்த பேருந்தும் வரவில்லை.
இதையடுத்து, 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கமலாபுரம், வளமாரிமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு, சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடந்தே சென்றனர்.