ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பெரும் திட்டத்துடன் காத்துக்கொண்டிருக்கும் சரஹா ஆப் நிறுவனர்! August 16, 2017

பெரும் திட்டத்துடன் காத்துக்கொண்டிருக்கும் சரஹா ஆப் நிறுவனர்!


இணையத்தில் தற்போது ட்ரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் சரஹா ஆப்பின் நிறுவனர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இணையம் முழுவதும் தற்போது சரஹா screen shotகள் தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கடந்த 5 நாட்களாக இந்தியா முழுவதும் இணையவாசிகளால் விரும்பி பயன்படுத்திவரும் இந்த சரஹா ஆப்பின் சிறப்பம்சமே முகம் தெரியாதவர்கள் நமக்கு தகவல் அனுப்புவதுதான். இந்த தகவல்கள்  விமர்சனங்களாகவும், காதலாகவும், அன்பாகவும், வசவுகளாகவும், கேலிக்கையாகவும் இணையவாசிகளால் பறிமாறப்பட்டுவருகிறது. 

இணையத்தில் மொட்டை கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்ததும் இணையவாசிகள் அனைவரும் குறுஞ்செய்திகளை நண்பர்கள், எதிரிகள், உறவினர்கள், மேலதிகாரிகள், ஆசியர்கள் என அனைவருக்கும் Feedback-க்குகளை பறக்கவிட்டனர். இந்நிலையில், சரஹாவில் தகவல் அனுப்புபவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனும் தகவல் பரவியதும், அவசரப்பட்டு ஆடிவிட்டோமோ என பலரும் புலம்பத்தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், சவுதி நாட்டில் வசித்துவரும் சரஹா ஆப்பின் நிறுவனர் ஜெயின் அலாப்தீன் தௌஃபிக் (ZainAlabdin Tawfiq) தான் உருவாக்கிய இந்த ஆப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டு கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார். அவை பின் வருமாறு.

சரஹாவின் வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்..?

இந்த அப்ளிகேஷன் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவோரிடம் இருந்து பல்வேறு Feedback -க்குகளை பெற்றுவருகிறோம். இந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் எங்களுடைய அடுத்த அப்டேட் விரைவில் வெளிவரும்.

சரஹா ஆப்பை உருவாக்கியது ஏன்..?

நான் கல்லூரி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ந்தவுடன் ஆக்கப்புர்வமான Feedback-க்குகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டேன். நாம் செய்யும் வேலைக்கு வரும் ஆக்கப்பூர்வான விமர்சனக்கள் நிச்ச்யம் நம்மை எப்போதுமே மேம்படுத்தத்தான் செய்யும். எனவேதான் இதற்கென ஒரு அப்ளிகேஷனை உருவாக்கினேன். பின்பு, வெறும் நிறுவனத்திற்கு மட்டும் இல்லாமல் வெகுசன மக்களும் பயன்படுத்தும் வகையில் இதை மாற்றியமைத்தேன்.”

சரஹா ஆப்பில் தகவல் அனுப்பியவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என வெளியான தகவல்கள் உண்மையா..?

நிச்சயமாக இல்லை. அந்த ஆப்பில் உள்ள கொள்கை மற்றும் விதிமுறைகளை படித்தாலே உங்களுக்கு இது தெளிவாகும். இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சமே பெயர் தெரியாத நபர்கள் அனுப்பும் தகவல்தான். எனவே நிச்சயமாக தகவல் அனுப்புபவர்களின் அனுமதியின்றி விவரங்களை வெளியிடமாட்டோம். அதில் தெரிவிக்கப்படுள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றும் பட்சத்தில் இது ஒரு ஆக்கப்பூர்வமான அப்ளிகேஷன் தான்.

நீங்கள் வாட்ஸ் ஆப்பை பின்னுக்கு தள்ளமுடியும் என்று நினைக்கின்றீர்களா..?

வாட்ஸ் ஆப்பின் செயல்பாடுகள் வேறு சரஹாவின் செயல்பாடுகள் வேறு. நாங்கள் வாட்ஸாப், மெசேஞ்சர் உள்ளிட்ட எந்த ஆப்ளிகேஷன்களையும் எங்களின் போட்டியாளர்களாக கருதவில்லை. நாங்கள் தனித்துவத்துடன் இயங்கிவருகிறோம். கூடிய விரைவில் பல அப்டேட்டுகளை வழங்க உள்ளோம்.

சரஹா இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்தியர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?

சரஹா இந்தியாவில் பிரபலம் அடைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நான் படித்து முடித்துவிட்டு இந்தியாவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில்தான் முதலில் பணியாற்றினேன். புரோகிராம்களை எழுத எனக்கு இந்தியர்கள்தான் கற்றுக்கொடுத்தனர். தற்போது  நான் உருவாக்கிய அப்ளிகேஷனை இந்தியர்கள் விரும்பி பயனப்டுத்துவது எனக்கு பெருமையாக உள்ளது. 

Related Posts: