ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

எல்லையில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல்! August 20, 2017

எல்லையில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல்!


சுதந்திர தினத்தன்று இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு ராணுவப்படையினரும் அடித்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - பூட்டான் - சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய - சீனா எல்லைப்பகுதியான பாங்காங் ஏரி அருகே இருநாட்டு படைகளும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. சுதந்திர தினத்தன்று சீன படைகள் இந்திய எல்லைக்குள் நுழை முற்பட்டதாகவும், அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தும்போது இந்த கைகலப்பு உருவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இந்த சண்டையில், இருதரப்பினரும் துப்பாக்கி மற்றும் பீரங்களை பயன்படுத்தாமல், கைகளாலும், கற்களாலும் முரட்டுத்தனமாக தாக்கிக்கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் இருதரப்பினரும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து, கருத்து தெரிவித்த ராணுவ அதிகாரிகள், “எப்போது இந்த சண்டை நடைபெற்றது என தெரியவில்லை. இந்த சண்டை குறித்து இன்னும் உறுதியான தகவல் வரவில்லை.” என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எல்லைப் பாதுகாப்பு குறித்து  3 நாட்கள் ஆய்வு செய்ய இன்று லே பகுதிக்கு செல்கிறார். ராணுவத்தளபதியை தொடர்ந்து இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் நாளை லே பகுதிக்கு சென்று 2 நாட்கள் ஆயுவு நடத்தவுள்ளார். 

இருநாட்டு படைகளும் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து,குடியரசுத்தலைவர் மற்றும் ராணுவத்தளபதி எல்லைப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்துவது, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Related Posts: