தவளப்பட்டி மலை கிராமத்தில் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தாததைக் கண்டித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மலைவாழ் மக்கள் 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தளவாய்ப்பட்டி கிராமத்திற்கு பள்ளியை தரம் உயர்த்த நிதியாக ஒரு லட்சம் ரூபாய் பணமும், நிலமும் வழங்கி 5 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாததால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளியை விரைந்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.