குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
குஜராத்தின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத்தில் நேற்று நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில், மாநிலத்தில் உள்ள 176 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏ-க்கள் அணி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததோடு, வாக்குச் சீட்டினை காங்கிரஸ் பூத் ஏஜண்ட்டான சைலேஷ் பாய் பார்மரிடமும், பாஜக தலைவர் அமித் ஷாவிடமும் காட்டியுள்ளனர். ஒரு கட்சியின் எம்எல்ஏ-க்கள் அந்த கட்சியின் பூத் ஏஜண்ட்டிடம் மட்டுமே தனது வாக்குச் சீட்டினை காட்ட வேண்டும் என்பதால், தங்கள் கட்சியைச் சேர்ந்த போலா பாய் கோஹிலும், ராகவ்ஜி படேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், எனவே அவர்களின் வாக்குகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் முறையிட்டது. இதற்கு பாஜக ஆட்சேபம் தெரிவித்தது.
இதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி 7 மணி நேரம் தாமதமானது. பின்னர், இருவரின் வாக்குகளும் செல்லாது என அறிவித்த தேர்தல் ஆணையம், அதன் பிறகு வாக்குகளை எண்ணத்தொடங்கியது. இறுதியில், அமித் ஷா, ஸ்மிருதி இரானி, அகமது படேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. மேலும், 4வதாக போட்டியிட்ட பல்வந்த் சிங் ரஜ்புத் தோல்வி அடைந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.