புதன், 9 ஆகஸ்ட், 2017

யார் இந்த தீபக் மிஸ்ரா? இவர் வழங்கிய தீர்ப்புகள் என்னென்ன? August 09, 2017

யார் இந்த தீபக் மிஸ்ரா? இவர் வழங்கிய தீர்ப்புகள் என்னென்ன?


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தீபக் மிஸ்ரா கடந்து வந்த பாதை மற்றும் முக்கிய தீர்ப்புகள் குறித்து பார்க்கலாம்.

தீபக் மிஸ்ரா கடந்து வந்த பாதை:

⌛ ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபக் மிஸ்ரா, கடந்த 1977-ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்து பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 

⌛ பின்னர் 1996ம் ஆண்டில் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக தீபக் மிஷ்ரா பதவி ஏற்றார். 

⌛ இதனைத்தொடர்ந்து கடந்த 1997-ல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

⌛ கடந்த 2009 ஆம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், 2010-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். 

⌛ கடந்த 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றார். 

⌛ இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள தீபக் மிஸ்ரா ஆகஸ்டு 28ம் தேதி பதவியேற்கிறார்.

தீபக் மிஸ்ராவின் முக்கிய தீர்ப்புகள் :

✍ கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற தீபக் மிஸ்ரா, பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக தமிழகத்தை புரட்டிப் போட்ட ஜல்லிகட்டு விவகாரத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்த போது வழக்கை சாதுர்யமாக அணுகினார். 

✍ கடந்த 1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன், தூக்குத் தண்டனை தொடர்பான வழக்கின் விசாரணையை நள்ளிரவில் நடத்தி குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்து அதிர வைத்தார். நிர்பயா கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தி, 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தார். தற்போது காவிரி வழக்கினை தொடர்ந்து விசாரித்து வரும் தீபக் மிஸ்ரா, கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்தபோது தமது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

✍ இதேபோல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், தமிழக அரசு மற்றும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக சாடியுள்ளார். தற்போது நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிய தமிழக அரசின் மனுவும் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது. 

✍ இதேபோல் காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை 24 மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

Related Posts: