திங்கள், 14 ஆகஸ்ட், 2017

கமண்டல நாகநதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி! August 13, 2017

கமண்டல நாகநதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!


ஆரணி கமண்டல நாகநதியில் தொடர் மழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதி  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக  கனமழை பெய்தது. இதனால் கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால், ஏராளமானோர் ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை கண்டு ரசித்தனர்.

Related Posts: