செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் இருக்கும் நெடுவாசல் மக்கள்! August 15, 2017

முகப்பு தமிழகம்
சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் இருக்கும் நெடுவாசல் மக்கள்!
August 15, 2017
சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் இருக்கும் நெடுவாசல் மக்கள்!


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதி மக்கள் 126வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சுதந்திர தினமான இன்று 126வது நாளை இப்போராட்டம் எட்டிய நிலையில், பொதுமக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை, போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Related Posts: