செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

​நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர்..!! August 15, 2017

​நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர்..!!


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

தருமபுரி மாவட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு, செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது. 

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்தது. குறிப்பாக நேற்று இரவு தொடர்ச்சியாக பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

இதனால் பெங்களூரில் கோரமங்களா, சிவாஜி நகர், கே.ஆர். மார்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

தேங்கியுள்ள மழைநீரை, அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Posts: