நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வுக்காக தமிழக அரசு இன்று தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 10 மணிக்கு மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவார் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றினால், மத்திய அரசு பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை அடுத்து, ஓராண்டிற்கு மட்டும் விலக்கு கோரும் அவசரச் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது.
இந்த சட்ட வரைவுக்கு மத்திய அரசின் சில துறைகள் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது திடீரென, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என அறிவித்துள்ளதால், தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.