உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்துக்குள்ளானது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஆவ்ரையா பகுதியில் கைஃபியாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட்19ம் தேதி பூரியிலிருந்து ஹரித்துவார் செல்லும் கலிங்கா எக்ஸ்பிரஸ் ரயில், முசாபர் நகர் அருகே கதால்லி (KHATAULI) என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 14 பெட்டிகள் ததடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மூன்று நாட்களுக்குள் மற்றொரு ரயில் விபத்து நடந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.