மகன் கண் முன்னரே பெண் ஒருவர் கும்பலால் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதற வைக்கும் இச்சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது ராதாநகர்.
இந்நகரில் 9வயது சிறுவன் உள்ளிட்ட நான்குபேர் பிச்சை எடுத்துவந்தனர்.
இந்நகரில் 9வயது சிறுவன் உள்ளிட்ட நான்குபேர் பிச்சை எடுத்துவந்தனர்.
அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் பெண்களின் தலைமுடியை மர்மமாக வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இக்கும்பல்கள் வைத்திருந்த பையில் தலைமுடி இருந்ததாக தெரியவந்தது. கத்தரிக்கோல் உள்ளிட்ட மர்மமான பொருட்களும் அப்பெண் வைத்திருந்த பையில் இருந்தன.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் இக்கும்பலை தாக்க தொடங்கினர்.
அக்கும்பல் மீது கற்கள் வீசினர்.
தாங்கள் பிச்சைக்காரர்கள் என்றும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் அக்கும்பலில் இருந்த பெண்கள் கதறினர்.
ஆனால் அதனை காதுகொடுத்து கேளாமல் ஆத்திரத்தில் இருந்த மக்க்கள் பெண் ஒருவர் தலையை கல்லால் சிதைத்தனர்.
45வயது மதிக்கத்தக்க அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது 9வயது மகனுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களுடன் சேர்ந்துவந்த மற்ற இரு பெண்களும் தப்பித்து ஓடிவிட்டனர்.
இவர்களுடன் சேர்ந்துவந்த மற்ற இரு பெண்களும் தப்பித்து ஓடிவிட்டனர்.
-அல்மஷூறா நியூஸ்