திங்கள், 18 செப்டம்பர், 2017

​டிக்கெட் எடுக்கக் கூறிய நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்..!! September 17, 2017


​டிக்கெட் எடுக்கக் கூறிய நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்..!!

சென்னை குரோம்பேட்டையில், டிக்கெட் எடுக்கச் சொன்னதால் அரசு பேருந்து நடத்துனரின் கன்னத்தில் பெண் போலீஸ் அறைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை குரோம்பேட்டையிலிருந்து காமராஜபுரம் வரை செல்லக்கூடிய மினி பேருந்து, லட்சுமி பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, 5 பேர் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்கள், ஒரு குழந்தையை விடுத்து, 4 டிக்கெட் மட்டுமே எடுத்ததாகக் கூறப்படுகிறது. 

அதற்கு நடத்துநர், 3 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமென கூறியதாகத் தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த கிண்டி மகளிர் காவல் நிலைய பெண் காவலர் வித்தியா என்பவர், தான் ஒரு போலீஸ் எனக் கூறி, நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார். 

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில், பெண் போலீஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. தகவல் அறிந்த சக ஓட்டுநர்கள், பேருந்துகளை காவல் நிலையம் முன்பு நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீஸாரிடம் வலியுறுத்தினர்.

Related Posts: