பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி பகுதிக்குள் யாரும் நுழையாதபடி, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர வாகனச் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.