அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் ஓகி புயலால் கடந்து இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்துள்ளனர். தொடந்து மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் காரையாறு பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.