சனி, 2 டிசம்பர், 2017

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை உயிரோடு இருந்த சம்பவத்தால் பரபரப்பு! December 2, 2017

Image

டெல்லியில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளில், ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நங்க்லோய் பகுதியைச் சேர்ந்த பெண், சாலிமார் பாக்கில் உள்ள மக்ஸ் (Max) என்னும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறை மாதத்தில், இரட்டைக் குழந்தைகள் இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரண்டு குழந்தைகளின் உடலையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு செய்வதற்காக சென்று கொண்டிருந்த போது, ஒரு குழந்தைக்கு உயிர் இருந்ததை பெற்றோர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை அருகில்  உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். Max மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து விளக்கம் கேட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.