ரோஹிங்கியர்கள் உட்பட அனைத்து அகதிகளின் உரிமைகளும் காக்கப்படவேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வங்கதேசம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ், மியான்மர் நாட்டிலிருந்து அகதிகளாக வந்து தஞ்சமடைந்தவர்களைச் சந்தித்து உணர்வுப் பூர்வமாக உரையாடினார்.
அப்போது பேசிய அவர், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சமூகத்தின் கீழ் தட்டு மக்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும் என வலியுறுத்தினார். மியான்மரில் ரோஹிங்கியர்கள் வசிக்கும் கிராமங்கள் அழிக்கப்பட்டது குறித்து அந்த மக்கள் அப்போது புகார் தெரிவித்தனர்.