திங்கள், 4 டிசம்பர், 2017

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை! December 3, 2017

Image

சென்னை, திருவள்ளூர் மீனவக் கிராமங்களில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சென்னை மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் 
, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து, சென்னை மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதனிடையே, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற, சென்னை மீனவர்கள் கரை திரும்பி கொண்டிருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும், நாளையில் இருந்து நான்கு நாட்கள் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts: