தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் கோடி அளவுக்கு கடன் வாங்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்திற்கு தப்பியோடிய அவர், தற்போது அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் இந்திய அரசின் சார்பில், புகழ்பெற்ற மார்க் சம்மர்ஸ் தலைமையிலான குழுவினர் வாதிடுகின்றனர். அதேநேரம் மல்லையா சார்பில் கிரிமினல் மற்றும் மோசடி வழக்குகளுக்கு புகழ்பெற்ற கிளேர் மாண்ட்கோமெரி ஆஜராகிறார்.