தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுகவினரே காரணம் என நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தமது மனுவை ஏற்பதாகக் கூறிவிட்டு பிறகு நிராகரித்துள்ளனர் என தெரிவித்தார்.
வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி கூறியதன் வீடியோ பதிவு தன்னிடம் உள்ளது என குறிப்பிட்ட விஷால், வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பதில் அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
சுமதி மற்றும் தீபன் ஆகியோரை ஆளும் அதிமுகவினர் மிரட்டியதாகக் குற்றம் சாட்டிய நடிகர் விஷால், மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இதுதான் கதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் ஒருவருக்கு தமது ஆதரவை அளித்து அவரை வெற்றி பெற வைக்கப் போவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.