புதன், 6 டிசம்பர், 2017

2ஜி வழக்கு கடந்து வந்த பாதை..! December 5, 2017

Image

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் 21 ம் தேதி வெளியாகிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை கீழே காணலாம்...

* 2009 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை.

* அக்டோபர் 2009 - தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு.

* மே 2010 - கார்ப்பரேட் தரகரான நீரா ராடியாவுடன் அமைச்சர் ஆ. ராசா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியானது.

* செப்டம்பர் 2010 -  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் என உச்சநீதிமன்றத்தில் மனு.

* நவம்பர் 2010 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு -  மத்திய கணக்குத் தணிக்கை குழு.

* நவம்பர் 2010 - தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா.

* டிசம்பர் 2010 - நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அடங்கிய டேப்புகள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.

* பிப்ரவரி 2011 - அ.ராசாவின் முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த்தா,  ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா கைது.

* பிப்ரவரி 2011 - கைது செய்யப்பட்ட ஆ.ராசா திஹார் சிறையில் அடைப்பு.

* மார்ச் 2011 - 2 ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பு.

* ஏப்ரல் 2011 - இரண்டு குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்தது. 

* மே 2011 - கனிமொழி, கலைஞர் டிவியின் MD ஷரத் குமாருக்கு சம்மன்.

* மே 2011 - கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைப்பு.

* அக்டோபர் 2011 - முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு.

* அக்டோபர் 2011 - குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதான விசாரணை தொடங்கியது.

* நவம்பர் 2011 - டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமின்.

* டிசம்பர் 2011 - மூன்றாவது குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்தது சிபிஐ.

* பிப்ரவரி 2012 - அமைச்சராக ஆ. ராசா ஒதுக்கிய 122 உரிமங்களும் ரத்து. 

* பிப்ரவரி 2012 - ப.சிதம்பரத்தை குற்றவாளி என அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி.

* ஆகஸ்ட் 2012 - ப.சிதம்பரத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி. 

* ஏப்ரல் 2014 - ஆ. ராசா, கனிமொழி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

* மே 2014 - 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடன் செயல்பட்டேன் - அ. ராசா.

* ஜுன் 2015 - 2 ஜி ஊழலில் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி முறைகேடாக சென்றது - அமலாக்கத்துறை
.
* ஆகஸ்ட் 2015 - ஆ. ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு - சிபிஐ.

* நவம்பர் 2015 - குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோரும் கனிமொழியின் மனு நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்

* ஏப்ரல் 2017 - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2ஜி வழக்கின் விவாதங்கள் முடிவடைந்தன.