செவ்வாய், 5 மே, 2020

கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடல்!

Image
கொரோனா தொற்று பரவியதால் கோயம்பேடு காய்கறி சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா பரிசோதனை தொடங்கியதில் இருந்து சந்தையை சார்ந்த ஏராளமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி கோயம்பேடு காய்கறி சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக வருகிற வியாழக்கிழமை முதல் சென்னை திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி சந்தை திறக்கப்படும் என கோயம்பேடு நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், திருமழிசை காய்கறி சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. 
credit ns7.tv