புதன், 10 ஜூலை, 2019

வழக்கறிஞர் நந்தினிக்கு ஜாமீன் வழங்கியது திருப்பத்தூர் நீதிமன்றம்..! July 10, 2019

Image
மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவருடைய தந்தை ஆனந்தன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியது தொடர்பாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதியிடம் வாதாடியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை சிறையில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் அடைக்கப்பட்டனர். இதனால் கடந்த 5ம் தேதி நடைபெற இருந்த அவரது திருமணம் நின்றுபோனது. 
மேலும், அவர்களை ஜாமீனில் விடுவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நந்தினியின் சகோதரி நிரஞ்சனா அறிவித்ததால் போலீசார் நிரஞ்சனாவை கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் வழக்கை விசாரித்த திருப்பத்தூர் நீதிமன்றம் நீதிபதிகள், நந்தினி மற்றும் அவரது தந்தைக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
credit ns7.tv