தொடர் கனமழை பெய்து வருவதையடுத்து, மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வும் மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
மஹாராஸ்டிர மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, மிக கனமழையாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் தெற்கு கொன்கன் பகுதியில் மழைப்பொழிவு மிக அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மஹாராஸ்டிராவின் பிற மாவடங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், மஹாராஸ்டிராவில் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது, காற்றின் வேகம் தீவிரமாக இருக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும் படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
credit ns7.tv