வியாழன், 11 ஜூலை, 2019

ரூ.50,000 செலவில் அசத்தல் ஆட்டோ மாடிஃபிகேஷன்! July 11, 2019

பைக் மாடிபிகேஷன், கார் மாடிபிகேஷன் போன்று ஆட்டோ மாடிபிகேஷனும் ஆட்டோமொபைல் துறையில் பிரபலம் அடைந்து வருகிறது.
சந்து, பொந்து என எந்தப் பகுதியிலும், போக்குவரத்து நெரிசல்களிலும் லாவகமாக செல்ல முடிவதால் அதிக மக்கள் ஆட்டோக்களை தங்களது தேவைகளுக்கு பயன்படுத்துக்கொள்கின்றனர். கூட்டத்தில் செல்லும்போது தனித்து தெரியவேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆட்டோக்களை உரிமையாளர்கள் மாடிபிகேஷன் செய்துகொள்கின்றனர்.
இந்தியாவின் டிவிஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் King ஆட்டோரிக்ஷாக்கள் தென் கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன. அங்கு இவற்றை Tuk-Tuk என்றும் அழைப்பதுண்டு. நம்மூரைப் போலவே ஆட்டோ மாடிபிகேஷனுக்கு சர்வதேச சந்தைகளிலும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் அமெரிக்க நாடான பெருவில் RL Fiberglass என்ற நிறுவனம் ஆட்டோக்களை மாடிபிகேஷன் செய்வதுல் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. புதிய பாடி வேலைப்பாடுகள், அசத்தும் வண்ணங்கள், நான்கு கதவுகள், சன் ரூஃப், அதிக பவரை அளிக்கும் விதமான பிஸ்டன்களுடன் மேம்படுத்தப்படும் ஆட்டோக்களில் பயணிப்பது வித்தியாசமான உணர்வையும் அளிக்கிறது.
modified auto
ஆட்டோக்களின் முகப்பு மற்றும் பின்புற தோற்றங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதில்லை, மாறாக ஆட்டோக்களின் தார்பாலின் கூரையை அகற்றிவிட்டு அதற்குபதிலாக fiberglass கொண்ட கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இது ஆட்டோவினை கார் போன்ற தோற்றத்திற்கு மாற்றுகிறது.
இதில் பட்டாம்பூச்சி போன்ற ஜன்னல்கள், கதவுகள், டோர் ஹேண்டில்கள், முகப்பு, பின்புறம் வரை விரிவுபடுத்தப்பட்ட ரூஃப், அட்டகாசமான முகப்பு, பின்புற விளக்குகள், ஏர் வெண்டிலேட்டர்கள், கவர்ச்சிகர பம்பர்கள் என தோற்றத்தில் ஆட்டோ என கண்டறியமுடியாத வகையில் மேம்படுத்தப்படுகின்றன.
இதன் உட்புறத்தில் அலங்கார விளக்குகள், பேட்டரியால் இயங்கும் விசிரிகள், 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் என சகலவிதமான வசதிகளுடன் ஆட்டோக்கள் உருமாறுகின்றன.
இந்த வகையான மாற்றங்கள் பெரு நாட்டின் பணத்தில் 2,100 Sols-ல் இருந்து தொடங்குகின்றன. இந்திய மதிப்பில் இது 43,750 ரூபாயாகும். 
முழுமையாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட ஆட்டோ 14,500 Solsக்கு கிடைக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்ச ரூபாயாகும்.
credit ns7.tv