வியாழன், 31 மே, 2018

மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்யாகண்ணு May 31, 2018

Image

அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு செல்லும் வழியில் திரண்ட பாஜகவினர், பரப்புரைக் குழுவின் பிரசார வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அய்யாகண்ணு பயணித்த வாகனமும் சேதமுற்றது. பிரசார வாகனத்தில் பயணித்த பெரியசாமி, காமராஜ் ஆகியோர் காயமுற்றதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக அரக்கோணத்தில் பரப்புரைக்கு சென்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மீது பாஜகவினர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

செயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபாயம்! May 31, 2018

Image

லாபத்தை பெருக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நுகர்வோரின் நலத்தில், சிறு அக்கறைக்கூட காட்ட மறுக்கும் மனங்கள் மாசடைந்ததால் தான், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்க உண்ணும் பழங்களும் மாசடைந்துவிடுகின்றன. 

சமீபத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களில் டன்கணக்கில், கார்பைடு கல் வைத்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்த காட்கிகளை பார்க்கும் போது, ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்வது பழமா? அல்லது விஷமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 

மக்களின் தேவையை தவறான வழியில் பூர்த்தி செய்ய, பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து, சுய லாபம் பார்க்கும் விற்பனையாளர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? 

மார்க்கெட்டில் அதிக மவுசு இருக்கும் பழங்களான வாழைப்பழம், மாம்பழம், தர்பூசனி, சப்போட்டா போன்ற பழங்களை கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள். 

இயற்கையாக பழங்கள் எப்படி பழுக்கின்றன என்பதை பார்க்கும் போது, சரியான, வெப்பநிலையிலும் , காற்றின் ஈரப்பதத்திலும் இயற்கையாக பழங்களுக்குள் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் அவற்றை பழுக்கச்செய்கின்றன.  அப்படி இயற்கையாக பழுக்கும் பழங்கள் மென்மையானதாகவும், நல்ல நிறத்திலும், நறுமணத்துடனும், சுவைமிக்கதாகவும் இருக்கும். 

ஆனால் இவை எதுவுமின்றி, செயற்கையகவே பழங்களை பழுக்க வைக்க, கால்சியம் கார்பைடு கற்களை பழங்களுக்கு பக்கத்தில் வைதால் போதும்.  பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையுடன், கால்சியம் கார்பைடு கலக்கும் போது,  அது வெப்பத்தையும், அசிட்டலின் என்கிற வாயுவையும் வெளியிடுகிறது. இந்த ரசாயன மாற்றம் இயற்கையாக பழம் பழுக்கும் முறையை செயற்கையாக துரிதப்படுத்துகிறது. 

48 முதல் 72 மணி நேரம் வரை இயற்கையாக பழம் பழுக்க தேவைப்படும் நேரம், செயற்கை முறையில் பழம் பழுக்க வெரும் 12 மணி முதல் 24 மணி நேரமாக குறைகிறது.  ஒருக்கட்டத்தில் வரைமுறையின்றி அதிக அளவில் பயன்படுத்தப்படும் கார்பைடு கற்களால் பழங்கள் சுவையற்றதாக மாறிவிடுகின்றன. 

செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் கண்களை கவரும் வகையில் பலபலவென இருக்கும். ஒரு கூடையில் இருக்கும் அனைத்து பழங்களும் ஒரே சீரான நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுக்கும் பழங்கள் அங்கங்கு நிறத்தில் மாற்றங்களோடு, சீரான நிறத்தில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லப்பழங்களையும் சாப்பிடுவதற்கு முன் நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு, தோலை உரித்து சாப்பிட வேண்டும். பழங்களை வெட்டி சின்ன சின்ன துண்டுகளாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனென்றால் கழுவி துண்டாக சாப்பிடும் போது, உள்ளே செல்லும் நச்சு பொருட்களின் அளவு குறையும். 

குறிபிட்ட பழங்களுக்கான சீசன் காலங்கள் அல்லாத நேரங்களில் அதை வாங்குவதை தவிற்க வேண்டும்  மேலும்,  கால்சியம் கார்பைடு புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளதால், புற்றுநோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

கால்சியம் கார்பைடில் இருக்கும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பொரஸ் போன்ற நச்சுப்பொருட்களால், அசிடிட்டி, வயிற்றுப்புன், நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு, கண் எரிச்சல், தோல் ஒவ்வாமை , தொண்டைப்புண் , இருமல், மூச்சுத்தினறல், நுரையீரலில் நீர் கோர்ப்பது போன்ற உடல் உபாதைகளுடன் அதிக அளவில் மக்கள் சிகிச்சைக்கு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

செயற்கையாக பழம் பழுக்கவைக்கப்படும் முறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது என்பதை,  கவனத்தில் கொண்டும் விற்பனையாளர்கள் இம்மாதிரியான சட்டவிரோதமான செயலில் ஈடுபடாமல், மக்கள் நலத்தோடு சேர்ந்து வரக்கூடிய லாபத்தில் மட்டுமே திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. 

குற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 2018

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், செங்கோட்டை தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Image

இதனால் குற்றாலம் மெயினருவியில், தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவி மற்றும் ஐந்தருவி பழைய குற்றாலம் ஆகியவற்றில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.


குற்றாலத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், அருவிகளில் நீர்வரத்தும், சீசனும் வந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, மெயினருவியின் கரையில் போதியளவில் காவல்துறை பாதுகாப்பு இல்லாததால், சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். 
 

இந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா?! May 31, 2018

சுற்றுலா தலமான சிம்லாவில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அன்றாட குடிநீர் தேவைக்கே அப்பகுதி மக்கள் அல்லாடி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன? குடிநீர் பற்றாக்குறையால் சிம்லா மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை பற்றிய தொகுப்பு.

சிம்லா... இந்த பெயரை கேட்டதும் ஒவ்வொருவர் மனதிலும், நினைவுக்கு வருவது பனி படர்ந்த சாலைகளும், பனிகட்டிகளின் ஊடே விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகளும் தான். ஆனால் சிம்லாவின் இன்றைய நிலை என்ன தெரியுமா.

கேப்டவுன்... ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் போகும் உலகின் முதல் பெருநகரம் என்ற அறிவிப்பு வெளியானதும் உலகமே ஒரு நிமிடம் நடுங்கி போனது. அப்படி ஒரு நிலையை நோக்கி சிம்லாவும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்.

சிம்லாவிற்கு தண்ணீர் வழங்கும் ஆறுகள் அனைத்தும் இந்த ஆண்டு வறண்டு விட்டன. போதிய தண்ணீர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள் என நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு சிம்லாவின் நிலை மாறி போய் உள்ளது. கார்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள் என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், முக்கிய பிரமுகர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதைவும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. 

தண்ணீர் தட்டுபாடு சிம்லாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் சரித்துள்ளது. சுற்றுலாவையே நம்பி உள்ள சிம்லாவிற்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டாததன் விளைவு, அங்குள்ள தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துள்ளன. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைபட சிம்லா பகுதிவாசிகள் தயாராக இல்லை. எங்களின் முதல் தேவை தண்ணீர் என்பது மட்டுமே சிம்லாவின் ஒட்டு மொத்த குரலாக மாறியுள்ளது. 

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுங்கள் எனக்கோரி சிம்லாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 

தண்ணீர் லாரி வரும் போது, கையில் கிடைத்த பொருட்களுடன் நீண்ட வரிசையில் காத்து நிற்பதும், ஒரு லாரி தண்ணீரை விநியோகிக்க சுமார் 70 போலீசார் காவலுக்கு நிற்பதும், சிம்லாவின் இன்றைய நிலையை படம் பிடித்து காட்டும் கண்ணாடி

சிம்லாவில் வசிக்கும் மக்களுக்கே தண்ணீர் இல்லை. அதனால் தயவு செய்து சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வர வேண்டாம். வேறு பகுதிகளுக்கு செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் அப்பகுதியில் வாழும் மக்கள்...

இந்த நிலையை மாற்ற அரசு முயல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தாலும், நீர் ஆதாரங்களை காக்க மக்களும் முன்வாருங்கள் என்ற முழக்கம் சிம்லாவில் வலுத்து வருகிறது. இன்று நாங்கள்.. நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என ஒட்டு மொத்த இந்தியாவையும் எச்சரிக்கின்றனர் சிம்லாவாசிகள். 

#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு? May 31, 2018

ரஜினியின் அரசியல் நகர்வை விட முக்கியமானது நேற்று தூத்துக்குடியில் நடந்த சம்பவம்... ரஜினி என்ற மிகப்பெரிய ஹீரோவை நோக்கி யார் நீங்க என இளைஞர் ஒருவர் கேட்க காரணம் என்ன? 

யார் நீங்க?


நான் தான்பா ரஜினி... நேற்றைய தினம் இது தான் இந்திய அளவில் எதிரொலித்த ஓர் வார்த்தை 20 வயதை கடந்த இளைஞனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் நிலையில் தான் ரஜினி இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். இருந்தும் நீங்கள் யார் என்ற கேள்வியை அந்த இளைஞன் எழுப்ப காரணம் என்ன...

கேள்விகளால் துளைத்தெடுக்கப்படும் ரஜினி

ரஜினி நடித்த படங்கள் வெளிவந்து விட்டாலே அதனை திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட உச்சநட்சத்திரம். அப்படிப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் இப்படி ஒரு வரவேற்பை நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்... சினிமாவில் ஹீரோவாக, தலைவனாக முன்னிறுத்தப்பட்ட ரஜினி தற்போது பொது வெளியில் கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறார். காரணம் அவர் அறியாதது அல்ல... மக்கள் பிரச்சனைகளில் அவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் வெளிப்பாடே இது என்பது கண்டிப்பாக ரஜினிக்கு தெரிந்திருக்கும்  

ஒரு நிமிடம் தலை சுற்றியது 

கொள்கை பற்றி கேட்கிறார்கள் தலை சுற்றுகிறது என்பதில் தொடங்கி ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிரான அலை சமூக வலைதளங்களில் வீசி கொண்டு தான் இருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு எழும் போதெல்லாம், இந்த மண்ணின் பிரச்சனைகளுக்காக அவர் என்ன செய்தார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே தான் இருக்கிறது. காவிரி போராட்டத்தின் போது காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக ரஜினி வெளியிட்ட வீடியோவிற்கு கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. 

போராட்ட கூடாது

போராட்டம் எல்லாம் செய்ய வேண்டாம், தேர்தல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய போதும், அவரது அரசியல் நிலைபாடு குறித்த கேள்விகள் எழ தொடங்கின. அரசியலில் ரஜினி யாருக்கோ சாமரம் வீச போகிறார் என்ற ஆருடங்கள் கணிக்கப்படுகின்றன என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வை. நீங்க யாரு... சென்னையிலிருந்து தூத்துக்குடி வர 100 நாள் ஆகி விட்டதா என்ற அந்த இளைஞனின் கேள்வியை, ரஜினியின் அரசியல் நிலைபாட்டோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்பதே அவர்கள் வைக்கும் வாதம். 

இளைஞனின் கேள்விக்கான பதில்

சினிமாவில் ரஜினியை கொண்டாடிய இளைஞர் சமூதாயம் இன்று அவரை ஊடகங்கள் முன்பு கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறது. யாருக்கான தலைவராக தன்னை முன்னிறுத்த போகிறார் என்பதே நீங்கள் யார் என்ற அந்த இளைஞனின் கேள்விக்கான பதிலாக இருக்கும். 

போர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018

கடந்தாண்டு வீசிய மரியா புயல் காரணமாக போர்ட்டோ ரிகோவில் 4 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது. 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலுவான இந்த புயல் தீவை சின்னாபின்னமாக்கியது.

இதில் 64 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுத் தரப்பில் கூறிய எண்ணிக்கையைவிட 70 மடங்கு அதிகமாக, அதாவது 4600க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

புதன், 30 மே, 2018

​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம் May 30, 2018

Image

கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், மங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழைக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகாவில் இடைவிடாமல் கொட்டிய மழையால்,  மங்களூரு நகரில் உள்ள கொட்டாரசவுக்கி, தொக்கோடு, எக்கூர், லால்பாக், வாமஞ்சூர், கிருஷ்ணாபுரா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் மழையால்,  உடுப்பி, குந்தாப்புரா, கார்கலா, பைந்தூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பள்ளி மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கடலோர கர்நாடக மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்! May 30, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால்பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த வருட இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள இவர் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போவதாகவும், என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் கூறி இன்று மதியம் தூத்துக்குடி  வந்தடைந்தார். 

அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மக்கள் சக்திக்கு முன்னால், எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர். சமூக விரோதிகளிடம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் எந்த தொழிலும் வளமும் பெருகாது. ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விரோதிகள் தான். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை எரித்ததும் சமூக விரோதிகள் தான்.

உளவுத்துறையின் தவறால் தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை விட்டுவிடக் கூடாது. எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது. இத்தனை போராட்டத்திற்குப் பின்னரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் ஆலை நிர்வாகத்திற்கு வரவே கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்தனர்; புனிதப் போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை.

சமூக விரோதிகளை ஜெயலலிதா வழியில் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறிய பின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறிவந்தார். 

அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். ரஜினிகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் நிலையை அறிந்துள்ளதாகவும், மாறுவேடமின்றி சென்றால் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தைப் பார்த்து தூத்துக்குடி இளைஞர் நீங்கள் யார் என்று கேட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இளைஞர் வேண்டுமென்று அப்படி கேட்டாரா? இல்லை சினிமாவில் இருக்கும் ரஜினிக்கும் நிஜத்தில் இருக்கும் ரஜினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் அப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை. 

களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு! May 30, 2018

Image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால், களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையை ஒட்டிய நீர்நிலைகள் வறண்டு காட்சியளித்தன.

தற்போது பெய்து வரும் மழையால், வறண்டு கிடந்த பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய் மற்றும் உப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அங்கு குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்கள்..! May 30, 2018

Image


அறிவியல் ஆராய்ச்சியின் பெயரால் 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்கள் கொல்லப்பட்டிருப்பது குறித்து வெளியான புள்ளிவிவரத்தால் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கும் திமிங்கலங்கள் குறித்து வெளியான புள்ளிவிபரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழலின் இயக்கவியல் குறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக திமிங்கலங்களை வேட்டையாடி ‘உயிரியல் மாதிரி’ என்று அவர்கள் வகைப்படுத்தி இந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக கடந்த கோடை காலத்தில் மட்டும் 333 'Minke' வகை அண்டார்டிகா திமிங்கலங்கள் கொல்லப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்களும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

வெடி மருந்துகளை திமிங்கலங்களின் உடலில் செலுத்தி வெடிக்கச் செய்து மிகவும் மோசமான வகையில் இவைகள் கொல்லப்பட்டு வருவதாகவும், இந்த முறையில் கொல்லப்படுவது சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தும் ஜப்பான் இந்த முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று  கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

புள்ளிவிபர கணக்கின்படி கொல்லப்பட்ட திமிங்கலங்களில் 67% பெண் திமிங்கலங்கள் என்றும், 114 திமிங்கலக் குட்டிகள் என்றும் தெரியவந்துள்ளது.

ஒருபுறம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இவை கொல்லப்படுவதாக கூறப்பட்டாலும் ஜப்பானின் மீன் சந்தைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் திமிங்கலங்களில் கறி விற்பனைக்கு கிடைப்பதாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள், குரல் கொடுத்து வருகின்றனர்.

செவ்வாய், 29 மே, 2018

கன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29, 2018

கன்னியாகுமரியில் தொடரும் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

கீரிப்பாறை, காளிகேசம், பால்குளம், வாளையத்து வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையால், ரப்பர் மரங்களிலிருந்து பால் வெட்டி எடுக்கும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழை காலங்களில் மாற்றுப்பணியை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Image

1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி May 29, 2018

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அளிக்கக்கூடாது என்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் விதிமுறையை சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனக் கூறி வழக்கறிஞர் புருஷோத்தமன் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். என்சிஇஆர்டி விதிகளின் படி மாணவர்களை கூடுதல் புத்தகங்களை வெளியிலிருந்து வாங்குமாறு வற்புறுத்தக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறினார். 

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, அவ்வாறு வீட்டுப்பாடம் வழங்கும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி விதிகளை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க 
ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

திங்கள், 28 மே, 2018

வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர்


பாஜக அல்லாத வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர் அந்த இயந்திரத்தின் பட்டன் ஐ கைவிடாது அழுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பதற்றம் அடைந்த இடத்தில் சக வாக்காளர்கள் அதை அச்சம்பவ இடத்திலேயே நின்று ஆதாரமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் இந்த வீடியோ காட்சியால் தலை குனிந்து இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீதித்துறை கூட இந்த வீடியோ காட்சி குறித்து தாமாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்து இந்திய ஜனநாயகத்தின் தூ ணாக இருந்து நாட்டை காக்கும்படி இந்த வீடியோ காட்சியை முடிந்தவரை பரப்புவது நமக்குள்ள கடமையாகும்

2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை - மாயாவதி அதிரடி! May 27, 2018

தான் விதிக்கும் நிபந்தனையை ஏற்றால் கூட்டணிக்குத் தயார் என்றும் இல்லை என்றால் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநில தேர்தல்கள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை மாயாவதி எடுத்துள்ளார்.

தலித் சமுதாயத்தினரை பெரும்பான்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. இது உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, ஹிமாச்சல், மத்தியப்பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் வாக்கு வங்கி வைத்துள்ளது.

2019ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ள சூழலில் இது தொடர்பான வியூகங்களை தற்போது எதிர்கட்சிகள் முன்னெடுத்துள்ளன.

இதனிடையே காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மிக முக்கிய தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் 3வது அணி அமைய வேண்டும் என்றும் மாநிலக் கட்சிகள் அதற்கு வலுவூட்ட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி தன்னுடைய கட்சி கூட்டணிக்கு தயார் என்றும் ஆனால் எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை கிடைத்தால் மட்டுமே அதற்கு உடன்பட முடியும் என்றும் கூறியுள்ளார்.


கூட்டணி தொடர்பாக தற்போது ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் 
தேர்தலுக்கு முன்னரே அதிக இடங்களை தங்கள் கட்சிக்கு அளிக்க கூட்டணி கட்சிகள் உடன்பட வேண்டும் இல்லையென்றால் தனித்துப் போட்டியிட தயாராக இருப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கட்சியின் தேசியத் துணைத் தலைவராக மாயாவதியின் சகோதரரை அவர் நியமித்தார், இது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மூத்த தலைவர்களான நசீமுதின் சித்திக், ஸ்வாமி பிரசாத் மவுர்யா, இந்திரஜித் சரோஜ் மற்றும் ஜுகுள் கிஷோர் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர்.

குடும்ப ஆட்சி முறையை மாயாவதி கையிலெடுக்கிறார் என்ற பேச்சு எழுந்ததாலும், அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறுவோரை தடுக்கும் வகையிலும் தன் சகோதரரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

பாஜக அல்லாத கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதி நிறுத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை சைக்கிள் பந்தயம்! May 27, 2018

Image

உலகின் உயரமான மலை சைக்கிள் பந்தயம் சிக்கிம் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இயற்கை எழில்கொஞ்சும் சிக்கிம் மாநிலம், கண்கவர் நிலப்பரப்பு, செங்குத்தான மலைமுகடுகள், பாறை சரிவுகள் என மலை சைக்கிள் சாகச விளையாட்டின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. 

இங்கு உலகின் மிக உயரமான மலை சைக்கிள் பந்தயம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது, இதனை Mountain Goats என்ற தனியார் அமைப்புடன் இணைந்து சிக்கிம் வடக்கு மாவட்ட நிர்வாகம் நடத்த உள்ளது.

‘Beti Bachao Beti Padhao’ மற்றும் இமயமலையை பாதுகாப்போம் என்ற தாரக மந்திரங்களை முன்னிறுத்தி இந்தப் பந்தயம் நடைபெற உள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டியில் இந்தியா முழுதும் இருந்து வந்த வீரர்கள் பங்கேற்றனர், ஆனால் தற்போது நடைபெற இருக்கும் பந்தயத்தில் இந்தியா மட்டுமல்லாது நேபாளம் மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

சிக்கிம் மாநில சுற்றுலா மற்றும் இளையோர் தொழில் முனைவோர் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த பந்தயத்தை அம்மாநில அரசு நடத்த உள்ளது. 

330 கிமீ தூரம் கொண்ட இப்பந்தயம் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதல் நாள், Mangan பகுதியில் தொடங்கி Lachung நகர் வரைக்கும், இரண்டாம் நாளில் Lachung நகரின் தொடங்கி Yumesamdong வரை சென்று பின்னர் மீண்டும் Lachung நகரை வந்தைடைய வேண்டும்.

பின்னர் 3ஆம் நாளில், Lachung நகரில் தொடங்கி Thangu மற்றும் Lachen axis வரைக்கும் சென்று Thangu பகுதிக்கு திரும்ப வேண்டும். போட்டியின் இறுதி நாளில் Thanguவில் தொடங்கி Gurudongmar ஏரியை வந்தடைய வேண்டும். ஆனால் இந்த பந்தயம் நடைபெற இருக்கும் பாதை மிகவும் கரடு முரடாக இருப்பதோடு, வீரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தயத்திற்கு பாதுகாப்பு அளிக்க இந்திய ராணுவம் முன்வந்துள்ளது, ராணுவ வீரர்கள் மருத்துவ மற்றும் வீரர்களுக்கு தேவையான உணவு, உபகரணங்களை வழங்க உள்ளனர். போட்டியில் வெல்பவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகையை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநிலங்களவை எம்.பி ஹிஸ்ஸே லசுங்கப்பா வழங்க உள்ளனர்.

2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக இருக்கும் - சந்திரபாபு நாயுடு May 27, 2018

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்று இணைய வேண்டும் என்று கூறினார். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றே நினைத்து அதனை ஆதரித்ததாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, ஆனால் வங்கி நடைமுறைகளில் நம்பிக்கை இழக்கும் அளவிற்கு அந்த திட்டத்தை மத்திய அரசு தவறாக செயல்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினார். 

இந்த கூட்டத்தின்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் ஆக வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது தமக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்றும், தெலுங்கு மக்களுக்காக பாடுபடவே தாம் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஞாயிறு, 27 மே, 2018

நான்கு ஆண்டு சாதனை...!!!




conspiracy behind Tuticorin protests?


BJP சூலுறைகள்

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் ராகுல்காந்தி



Image may contain: 1 person, smiling, text


அகில இந்திய அளவில் முதல் எதிர்ப்பு குரல் அவரிடம் இருந்துதான் வந்தது
ிக கடுமையாக அதே நேரம் மிக உருக்கமாக அவர் தூத்துகுடி மக்களுக்காக அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியதற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறவேண்டும்
தமிழகம் இந்தியாவின் பகுதி அவர்கள் நம் சகோதரர் என்ற சிந்தனை இப்போதைக்கு அகில இந்திய தலைவர்களில் அவருக்குத்தான் இருக்கின்றது
அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்,
மிக பெரும் பக்குவபட்ட தலைவராக வளர்ந்துவரும் ராகுல் தமிழகத்திற்கு நல்வழி காட்டட்டும், தமிழகமும் அவர் கரங்களை வலுபடுத்தட்டும்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி குற்றச்சாட்டு May 27, 2018

Image

தூத்துக்குடியில் 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அபிவிருத்திஸ்வரம்-கமுககுடி இணைப்பு பாலத்தை திறந்துவைத்த கனிமொழி, 7 ஆண்டுகளுக்கு பின் இந்த பாலம் திறக்கப்பட்டது வெற்றி தான் எனக் கூறினார்.

144 தடை உத்தரவு இருந்ததால் தான் தூத்துக்குடி செல்லவில்லை என ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூத்தாநல்லூர் சென்ற கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, தூத்துக்குடி சம்பவம் குறித்து ஒரு ட்வீட் கூட போடாத பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சவால் விட்டுகொண்டிருப்பதாக விமர்சித்தார்.

சனி, 26 மே, 2018

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! May 26, 2018

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு முடக்கியது. இதனால் +2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். 
Image

இதனை விசாரித்த நீதிபதிகள்,  தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, தூத்துக்குடி தவிர்த்து மற்ற இரண்டு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கு மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இன்றைகுள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இலவச சட்ட உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து, அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரப்படுவது தொடர்பாக, ஆறு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ஏன்? - பொதுநல வழக்குத் தாக்கல்! May 25, 2018

Image



கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கும் போது, ஒரு ஆண்டில் 193 நாட்களுக்கு மட்டுமே இயங்குவது ஏன் எனவும், உச்சநீதிமன்றத்தின் விடுமுறை காலவரையறையை குறைக்கக் கோரியும் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக செய்தித்தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா உச்சநீதிமன்ற விடுமுறை கால வரம்பை குறைக்கக் கோரி இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின் படி நீதியை தாமதிக்காமல் வழங்குவது அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்றும் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில் சுமார் 60,000 வழக்குகளும், நாடுமுழுவதுமுள்ள நீதிமன்றங்களில் 3.3 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கும் நிலையில், 225 வேலை நாட்கள் என்ற உச்சநீதிமன்ற விதிகளின்படி சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு ஆண்டிற்கு 193 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ஏன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் ஒரு ஆண்டிற்கு உச்சநீதிமன்றம் 193 நாட்களும், உயர்நீதிமன்றங்கள் 210 நாட்களும், விசாரணை நீதிமன்றங்கள் 245 நாட்களும் இயங்கி வருகிறது. 

13 நீதிமன்றங்கள் செயல்படும் உச்சநீதிமன்றத்தின் ஒரேயொரு நீதிமன்றம் மட்டுமே அவசர வழக்குகளை கோடை கால விடுமுறையின் போது விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தை பொருத்த வரையில் அதற்கு 5 பருவ விடுமுறை காலம் அளிக்கப்பட்டுவருகிறது. கோடை கால விடுமுறையாக 45 நாட்களும், குளிர்கால விடுமுறையாக 15 நாட்களும், ஹோலி பண்டிகைக்கு ஒரு வாரமும், தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு 5 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், குறைந்தபட்சம் 225 நாட்களும் ஒரு நாளைக்கு 6 மணிநேரங்களும் இயங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற விதிகளை சுட்டிக்காட்டி இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார் அஸ்வினி குமார்.

மேலும், இது 70 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் கால நடைமுறை என்றும் அக்கால கட்டத்தில் நீதிபதிகள் வீட்டிலிருந்து வந்து போல நீண்ட நேரம் ஆகும் என்பதாலேயே இந்த நடைமுறை இருந்ததாகவும், இதனை ரத்து செய்தால் தான் தேக்கம் அடைந்துள்ள வழக்குகளில் விரைந்து நீதி கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்ற டி.எஸ் தாக்கூர் கோடைகால விடுமுறையின் போது வழக்குகளை விசாரிக்கலாம் என்றும் அதன் மூலம் சில வழக்குகளில் முடிவு கிடைக்கும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

வழக்குகளில் தாமதமாக முடிவுகள் கிடைப்பது ஒன்றும் புதிய பிரச்சனை இல்லை என்றும் இது பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது என்றாலும் அது தற்போது அச்சமூட்டும் நிலைக்கு வந்துள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் இதனால் நீதித்துறையை சிரமத்தை சந்தித்து வருவதோடு, மறுபக்கம் மக்களின் நம்பிக்கையையும் இந்த விவகாரம் அசைத்துப் பார்த்துள்ளது என்றும் இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஓரளவு விடிவு கிடைக்கும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்! May 26, 2018

Image

மேட்டுப்பாளையத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை ராட்சத பலூனில் பறந்தபடி கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தமிழகத்தில் சீரான சீதோசனநிலை மற்றும் அளவான காற்று வீசும் சூழல், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே இருப்பதால், அங்கு ஆண்டுதோறும்  ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பூங்காவில் ராட்சத பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. 

பல வண்ணங்கள் கொண்ட ராட்சத பலூனில் ஏறி அமர்ந்து கொள்ளும் சுற்றுலா பயணிகள், ராட்சத பலூன் மெல்ல மெல்ல வானுயர எழுவதை உற்சாகத்துடன் அனுபவித்து வருகின்றனர். இந்த சாசக விளையாட்டு, இந்திய விமானப்படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில்,  அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென்று பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென்று பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

Image may contain: 1 person, text

வெள்ளி, 25 மே, 2018

​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு! May 25, 2018

தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக போலீசாரால் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, 65 பேரை கைது செய்தனர். 

அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட திரளான வழக்கறிஞர்கள் குவிந்திருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டரிந்த நீதிபதி சாருஹாசனி, கைது செய்யப்பட்டவர்களை அவர்களது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். மேலும், காவல்துறையினர் தாக்கினார்களா என்றும் வாக்குமூலம் பெறப்பட்டது. 
Image

திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு May 25, 2018

Image


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தோழமை கட்சிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னையில் முக்கிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

திமுக தோழமை கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைப்பு ஆட்டோ, டாக்ஸிக்கள் குறைந்த அளவில் இயக்கம் ரயில், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு சென்னை முழுவதும் உஷார் நிலையில் போலீஸார்

சென்னை போலீஸார்கள் குவித்த வண்ணம் பலத்தப் பாதுகாப்புடன் இருகின்றது கடற்கரை சாலைகளில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தி இருகின்றனர்.

அணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018

ஏற்கனவே அறிவித்தபடி அணு ஆயுத சோதனை மையங்களை வட கொரியா வெடி வைத்து தகர்த்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், இதற்கான அறிவிப்பினை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார்.

அதன்படி, நாட்டின் 3 பகுதிகளில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை வட கொரியா நேற்று வெடி வைத்து தகர்த்தது.

ரஷ்யா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில், 3 அணு ஆயுத சோதனை மையங்களும் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.

அணு ஆயுத சோதனை மையங்கள் பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட்டதாக வட கொரிய அணு ஆயுத உற்பத்தி மையத்தின் துணை இயக்குநர் தெரிவித்தார். 

Image

144 தடை உத்தரவு என்றால் என்ன? May 25, 2018

144 தடை உத்தரவு என்றால் என்ன?

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.

யார் பிறப்பிக்கலாம்?

மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் பகுதிக்குள்ளான இடங்களில் குறிப்பிட்ட நபருக்கு எதிராகவோ, குறிப்பிட்ட நகரத்திற்கு எதிராகவோ இந்த உத்தரவை பிறப்பிக்கலாம்.

மீறினால் என்ன தண்டனை?

இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149ன் படி 144 தடை உத்தரவை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது தண்டனைத்தொகை விதிக்கப்படும். 

குமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்கப்படவில்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா May 25, 2018

Image

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் 68 சீட்கள் பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 சீட்கள் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பரமேஸ்வராவிடம், குமாரசாமி முதல்வராக 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்ட போது அது குறித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

மேலும், மந்திரிசபையில் எந்த கட்சிக்கு எந்த துறைகளை பகிர்ந்தளிப்பது என்பது குறித்தும், முதல்வராக குமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு அளிப்பதா அல்லது காங்கிரஸ் கட்சியும் அப்பதவியை பகிர்வதா என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் நடைபெறவில்லை என்றும் பரமேஸ்வரா கூறினார்.

துணை முதல்வர் பதவி குறித்த தேர்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில மூத்த தலைவர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி எதுவும் தனக்கு தகவல் இல்லை என்றும் கட்சியின் தலைமையே இது குறித்த முடிவுகளை எடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், மற்றொரு முக்கியத் தலைவரான டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாகவும், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ரகசிய கூட்டம் நடத்தியிருப்பதாகவும் வெளியான தகவல் குறித்த கேள்விக்கு அப்படி ஒரு கூட்டம் நடந்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் ஆனால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது மட்டும் உறுதி என்றார்.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிவக்குமார் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவது குறித்த கேள்விக்கு, அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அனுபவம் வாய்ந்த அவர் கட்சியை திறமையுடன் வழிநடத்த தகுதியானவர் என்று கூறினார்.

வியாழன், 24 மே, 2018

#போலீஸ்_அராஜகம்_2வது_நாளாக (23.05.18)


Cartoon

தூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி! May 24, 2018

Image

தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் உணவு, குடிநீர்  இன்றி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், நேற்று அண்ணா நகர் என்ற பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற இளைஞரும் உயிரிழந்தார். 

சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.  தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், தூத்துக்குடியில் காமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உணவு, குடிநீர்,  பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், கடந்த 3 தினங்களாக அவதியடைந்து வருவதாக தூத்துக்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.