செவ்வாய், 29 மே, 2018

1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி May 29, 2018

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அளிக்கக்கூடாது என்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் விதிமுறையை சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனக் கூறி வழக்கறிஞர் புருஷோத்தமன் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். என்சிஇஆர்டி விதிகளின் படி மாணவர்களை கூடுதல் புத்தகங்களை வெளியிலிருந்து வாங்குமாறு வற்புறுத்தக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறினார். 

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, அவ்வாறு வீட்டுப்பாடம் வழங்கும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி விதிகளை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க 
ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.