வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்று எழும் பலவிதமான குழப்பங்களுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே தீர்வை வழங்கியுள்ளனர்.
ஒரு சரியான ஆதாரம் கிடைக்காத பொழுதிலும், நம் பிரபஞ்சத்திற்கு இணை பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்கிற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ‘பிரபஞ்சம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பரிணாமம்’(Evolution and Assembly of Galaxies and their Environments) என்ற ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
இந்த ஆராய்ச்சியில், அவர்கள் கண்டறிந்த மிக முக்கியமான விஷயம் ‘இருண்ட ஆற்றல்’ (dark energy). இதுபோன்ற இருண்ட ஆற்றல் ( புவி ஈர்ப்பின் எதிர்ப்பதம்) மூலம், பல பிரபஞ்சங்கள் உருவாக முடியும் என்றும் அந்த புதிய பிரபஞ்சத்தில் உயிவாழ்வதற்கு தகுதியான சூழல் உருவாகியிருக்கலாம். அதனால், அங்கே மக்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.